அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல வளாகத்தின் தமிழ்மன்றமானது உலகத்தின் செம்மொழிகளில் ஒன்றும், இந்தியத் திருநாட்டின் பெருமைக்குரிய முதுமொழியுமாகிய தமிழின் வளர்ச்சியிலும், ஆக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் மாணவர்களுக்கும், தமிழார்வமிக்க பேராசிரியர்களுக்கும், அமைச்சுப் பணியாளர்களுக்கும் ஏற்றதொரு களமாகத் தனது
பங்களிப்பினை நல்கி, அறிவியல்- தொழில்நுட்பம்- மேலாண்மை சார்ந்த இருபத்தோராம் நூற்றாண்டின் முன்னேற்றப் பாதைக்கு ஏற்பத் தமிழ்மொழியின் வரையறைகளைச் செப்பனிடவும், விரிவு செய்திடவும் வழிகாட்டுகின்ற ஓர் அமைப்பாகத் தமிழ்கூறு நல்லுலகில் செயலாற்றி வருகின்றது.